Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இந்தவுயிர் கௌமாரம் யௌவனமூப் பென்பவற்றை
வந்தவுட னின்று மருவுதல்போ – லந்தவுயிர்
வேறுடல மேவுதலு மிக்கன்ன தாங்கதனைத்
தேறுமவர் தாங்கலங்கார் தீர்ந்து.   2.13

இந்த உயிர்

இந்த (உடம்பிலிருக்கும்) ஆத்மாவானது

வந்த உடல் நின்று

வந்தேறியான உடலிலே இருந்துகொண்டு

கௌமாரம் யௌவநம் மூப்பு என்பவற்றை

இளமை வாலிபத் தன்மை கிழத்தனம் என்னும் நிலைகளை

மருவுதல் போல்

அடைவதுபோல்

அந்த உயிர்

அதே ஆத்மாவானது

மிக்கு

தேஹமரணத்திற்குப்பின்

வேறு உடலம் மேவுதலும்

வேறு உடம்பை அடைவதும்

அன்னது

தேஹஸம்பந்தத்தால் ஏற்படுவதேயொழிய ஆத்மாவின் தன்மையல்ல

ஆங்கு அதனை தேறுமவர்

பிறப்பு இறப்பு என்னுமிரண்டும் தேஹத்தின் தன்மையே என்பதை அறிகிறவர்கள்

தாம் தீர்ந்து கலங்கார்

தாமே (ஆத்மாவின் நித்யத்தன்மையில்) உறுதியுடனிருக்கையாலே கலங்கமாட்டார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top