Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தன்மாத் திரைதீண்டுந் தன்மையவை சீதமழ
லென்மாச் சுகதுக்க மெய்துவிக்கும் – புன்மாயம்
வந்தியன்று போமதனான் மற்றவற்றை யெய்தலுறாக்
குந்திசுதா நீபொறுத்துக் கொள்.   2.14

குந்தி சுதா

குந்தியின் பிள்ளையே!

தன்மாத்திரை தீண்டும் தன்மையவை

தன்மாத்திரையின் கார்யமான சப்தாதி விஷயங்கள் இந்திரியங்களைத் தொடுவதாலேற்படும் ஸம்யோகங்கள்

சீதம் அழல் என்(ம்) மா சுக துக்கம் எய்துவிக்கும்

குளிர் உஷ்ணம் என்கிற பெரிய சுகதுக்கங்களை அடைவிக்கும்

புன் மாயம்

மிகச்சிறிய இத்துன்பம்

வந்து இயன்றுபோம்

வந்து சிலகாலம் நின்று அழிந்துவிடும்

மற்று

(மோக்ஷமாகிற) விலக்ஷணநிலையில்

அவற்றை எய்தல் உற

(ஜீவர்கள்) இந்த சுகதுக்கங்களை அடையமாட்டார்கள்

அதனால் நீ பொறுத்துக்கொள்

(மோக்ஷமடையும் வரையில்) இக்காரணத் தாலேயே (இச்சுகதுக்கங்களை) நீ பொறுத்துக்கொள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top