Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மேவுபொரு ளெல்லாம் விபரீத மாகவே
தாவுமிருள் சேர்ந்து தனஞ்செயனே – யாவதென
வொன்று மதன்மத்தை வேறுணரும் புத்திதான்
சென்று கடைக்குணததாஞ் சேர்ந்து.       18.32

தனஞ்செயனே

அர்ஜுனா!

தாவும் இருள் சேர்ந்து

பரவிநிற்கும் (அறிவின்மையை உண்டாக்கும்) தமோகுணத்தால் சூழப்பட்டதாய்

ஆவது என ஒன்றும் அதன் மத்தை

'இதுவே தக்கது' என்று நினைக்கவைக்கும் அதர்மத்தை

வேறு உணரும்

தர்மமாகவே நினைப்பதாய்

மேவு பொருள் எல்லாம்

ஸித்தமாகவும் ஸாத்யமாகவும் உள்ள எல்லாப் பொருள்களையும்

விபரீதமாகவே உணரும்

நேர்மாறாகவே அறிவதான

புத்தி தான்

அறிவானது

சென்று சேர்ந்து

ஜீவனை வந்தடைந்து

கடைக்குணத்து ஆம்

முக்குணங்களில் கடைசி குணமான தமோகுணத்தால் உண்டானதாய் இருக்கும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top