Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

உண்மையினா னெஞ்சை யுயிர்புலன்க ளுற்றசெயல்
வண்மையறி யோகத்து மன்னிவருந் – திண்மையினா
லுற்றே தரிக்கு முயர்திருதி பார்த்தனே
யற்றே முதற்குணத்த தாம்.           18.33

பார்த்தனே

அர்ஜுனனே!

வண்மை அறியோகத்து மன்னிவரும் திண்மையினால்

(தாழ்ந்த பயன்களைக் கருதாமல்) உயர்ந்த பயனான மோக்ஷத்திற்கு ஸாதநமான பகவதுபாஸநத்தில் ஊன்றியிருக்கும் உறுதியினாலே

நெஞ்சு உயிர் புலன்கள் உற்ற செயலை

மனம் பிராணன் இந்த்ரியங்கள் ஆகியவற்றின் செயல்களை

உண்மையினால் உற்றே தரிக்கும் உயர் திருதி

உள்ளபடி பொருந்தி தரிக்கும் உயர்ந்த த்ருதியானது

அற்றே முதற்குணத்தது ஆம்

நிச்சயமாக முதல் குணமான ஸத்வ குணத்தால் உண்டானதாகும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top