Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

எங்குங் கரம்பாத மெங்குங்கண் சென்னிமுக
மெங்குஞ் செவியா மியல்புடைத்தாய் – இங்குலகி
லெப்பொருளுந் தன்றகவா லேய்ந்து பரந்துநிற்கு
மப்பொருளின் றன்மை யது.      13.13

அப்பொருளின் தன்மையது

பரம்பொருளின் தன்மையுடைய அந்தப் பரிசுத்தாத்ம ஸ்வரூபம்

எங்கும் கரம் பாதம்

எல்லாவிடத்திலும் கைகால்கள் செய்யக்கூடிய கார்யத்தையும்

எங்கும் கண் சென்னிமுகம்

எல்லாவிடத்திலும் கண் தலை முகம் செய்யும் கார்யங்களையும்

எங்கும் செவி

எல்லாவிடத்திலும் காது செய்யும் கார்யத்தையும்

ஆம் இயல்பு உடைத்தாய்

செய்யும் வல்லமையுடையதாய்

இங்கு உலகில்

இவ்வுலகில்

எப்பொருளும்

எல்லாப் பொருள்களையும்

தன் தகவால்

தன்னுடைய அறிவால்

ஏய்ந்து

பொருந்தி

பரந்துநிற்கும்

வியாபித்து நிற்கும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top