Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இவ்வறிவா லெய்து முயிர்தன்னை யீங்குரைக்கே
னெவ்வறிவா னல்லமுத மெய்தலாஞ் – செவ்வையதி
லாதியில தெற்பரமா யான்ற பிரமமா
யீதிலதுண் டென்றுரைப்ப தில்.       13.12

எவ்வறிவால்

எதை அறிந்தால்

நல் அமுதம் எய்தலாம்

நன்மைமிக்க அழியாத ஆத்மாவை அடையலாமோ

இவ்வறிவால் எய்தும் உயிர்தன்னை

அத்தகைய ஜ்ஞான ஸாதனங்களால் அடையப்படும் ஆத்ம ஸ்வரூபத்தை

ஈங்கு உரைக்கேன்

இவ்விடத்தில் கூறுகிறேன்

அதில் செவ்வை

ஆத்மாவின் சிறப்புகளாவன

ஆதி இலது

ஆதியில்லாதது (அந்தமுமில்லாதது)

எற்பரமாய்

எனக்கு ஆட்பட்டதாய்

ஆன்ற பிரமமாய்

மிகப்பெரியதாய்

ஈது இலது

இது காரணநிலையிலுள்ள ஆத்மாவைப்போல் 'இலது' என்று சொல்லத்தக்கதாகவோ

(ஈது) உண்டு என்று உரைப்பது இல்

இது காரியநிலையிலுள்ள ஆத்மாவைப் போல் உள்ளது என்று சொல்லத்தக்கதாகவோ இராதது இந்த ஆத்மஸ்வரூபம்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top