Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

எத்தாலே நின்வணங்கா ரீங்கவர்கண் மாலவனே
யத்தா பெரியோ யயன்றனக்கும் – வித்தே
யளவிறே வேசநீ யாங்குலகில் வைப்பே
யுளதிலதவ் வக்கரமே லுற்று.   11.38

மாலவனே!

மஹாபுருஷனே

அத்தா

ஸ்வாமியே!

பெரியோய்

(ஸ்வரூப ரூப குண விபூதிகளில்) பெரியவனே!

அயன் தனக்கும் வித்தே!

பிரமனுக்கும் காரணமே!

ஈங்கு

நீ இப்படிப்பட்டவனாயிருக்கும் போது

அவர்கள்

அந்த தேவர்கள்

எத்தாலே நின் வணங்கார்

ஏன் உன்னை வணங்கமாட்டார்கள்?

அளவில் தேவேச

மூவகையான அளவு இல்லாத தேவர் தலைவனே!

ஆங்கு உலகில் வைப்பே

உலகம் முழுவதிலும் உறைபவனே!

இலது

நாமரூபங்களற்றதாய், காரணநிலையிலுள்ள மூலப்ரக்ருதியும்

உளது

நாமரூபங்களையுடையதாய், கார்யநிலையிலுள்ள மூலப்ரக்ருதியும்

அவ்வக்கரம்

(இந்த மூலப்ரக்ருதியோடு கூடிய) ஜீவாத்ம ஸ்வரூபமும்

மேல் உற்று நீ

இவற்றுக்கு மேல் உள்ள முக்தஸ்வரூபமும், நீயே.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top