Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

துங்கமுதற் றேவனீ தொல்புருட னிவ்வுலகுக்
கங்குநிதி நீயறிவோ னவ்வறிவிற் – றங்குபொருண்
மேலுயருந் தாமமுநீ மிக்கனந்த ரூபாநின்
பாலுலகி னின்றாய் பரந்து.   11.39

துங்க முதல் தேவன் நீ

மிகப்பெரிய ஆதிதேவன் நீயே

தொல் புருடன் நீ

புராண புருஷன் நீயே

அங்கு இவ்வுலகுக்கு நிதி நீ

அத்தகைய இவ்வுலகுக்கு ஆதாரம் நீயே

அறிவோன்

(உலகிலுள்ள எல்லா) அறிபவனும்

அந்த அறிவில் தங்கு பொருள்

அந்த அறிவினால் அறியப்படும் பொருளும்

மேல் உயரும் தாமமும் நீ

மேல் உள்ள பரமபதமும் நீயே

அநந்தரூபா

அளவற்ற உருவங்களையுடையவனே!

நின்பால் உலகில்

உன்னிடம் தங்கி நிற்கும் உலகில்

மிக்கு பரந்து நின்றாய்

மிகவும் வியாபித்து விளங்குகிறாய் நீ

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top