Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பந்தமுற வாங்கவனும் பார்த்தான் படையிரண்டிற்
றந்தையர்கள் பாட்டர்தாந் தாழ்குருக்கள் – மைந்த
ருடன்பிறந்தார் பேர ருயர்மாமர் தோழர் 
மடந்தைய ருண் மாமடிகண் மற்று.   1.21

ஆங்கு

அந்தப் போர்க்களத்தில்

அவனும்

அந்த அர்ஜுனனும்

படை இரண்டில்

இரண்டு ஸேனைகளிலும்

தந்தையர்கள்

பெரிய தகப்பன்மார்களையும்

பாட்டர்

பாட்டன்மார்களையும்

தாம் தாழ் குருக்கள்

தாம் வணங்கும் ஆசாரியர்களையும்

மைந்தர்

புத்திரரையும்

உடன் பிறந்தார்

கூடப்பிறந்தவர்களையும்

பேரர்

பேரர்களையும்

உயர் மாமர்

பெருமைபெற்ற மாமன்மாரையும்

தோழர்

நண்பரையும்

மற்று17

மேலும்

மடந்தை அருள் மாமடிகள்

மனைவியைப் பெற்றுக்கொடுத்த மாமனார்களையும்

தம் உற

அன்போடு

பார்த்தான்

பார்த்தான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top