Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மேவலராய் நின்றெதிர்ந்த மிக்கபெருஞ் சுற்றமாம்
காவலரை நோக்கிக் கவுந்தேய – னோவதனான் 
மிக்கமனம் பேரிரக்க மேவிப் பிரான்முன்றான்
றக்கவுரை செய்தான் றளர்ந்து.        1.22

கவுந்தேயன்

குந்தீபுத்திரன்

மேவலராய் நின்று எதிர்ந்த

உறவற்றவர்களாய் நின்று போரிடவந்த

மிக்க பெரும் சுற்றம் ஆம் காவலரை நோக்கி

எண்ணிக்கையிலும் உறவிலும் பெருத்துநின்ற அரசர்களைப் பார்த்து

பேர் இரக்கம் மேவி

பெரும் கருணைகொண்டு

மிக்க மனம் நோவதனால்

மிகவும் மனம் துன்புற்றதனால்

தளர்ந்து

தளர்வெய்தி

பிரான்முன்

கண்ணபிரான்முன்

தான் தக்க உரை செய்தான்

தன்மைக்கேற்ற வார்த்தையைச் சொன்னான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top