Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆங்கதற்பின் வெள்ளைப் புரவியணி தேரின்மேற்
பாங்கமரு மாதவனும் பாண்டவனு – மோங்கரவச் 
சங்கமலர்க் கைகளினாற் றம்முகம்வைத் தூதினா  
ரங்கமலத் தன்னமது வாம்.    1.12

ஆங்கு

அந்த யுத்தபூமியில்

அதன்பின்

அதற்குப்பின்

வெள்ளை புரவி அணிதேரின் மேல்

வெள்ளைக் குதிரைகளால் அலங்கரிக்கப்பட்ட தேரின்மேல்

பாங்கு அமரும் மாதவனும் பாண்டவனும்

அருகில் அமர்ந்திருக்கும் கண்ணனும், அர்ஜுனனும்

அம் கமலத்து அன்னம் அதுவாம்

அழகிய தாமரையில் அன்னம்போல் உள்ள

ஓங்கு அரவச் சங்கம்

ஓங்கும் ஒலியையுடைய சங்கங்களை

மலர் கைகளினால் தம் முகம் வைத்து

(தாமரை) மலர்போன்ற கைகளினால் தம் முகங்களிலே வைத்து

ஊதினார்

ஊதினார்கள்

பன்னியசீர்ப் பாஞ்ச சனியப் பணவத்தை  முன்னிருடீ கேசன் முழக்கினான்மன்னியபூந்  தாரார் தனஞ்சயனுந் தன்றேவ தத்தமெனுஞ்  சீரார்சங் கூதினான் சேர்ந்து.

பன்னிய சீர் பாஞ்சசனியப் பணவத்தை

பெருமைமிகுந்த பாஞ்சஜந்யமெனும் சங்கத்தை

முன்

முதலில்

இருடீகேசன்

கண்ணன்

முழக்கினான்

முழங்கச்செய்தான்

மன்னிய பூ தார் ஆர் தனஞ்சயனும்

(அரசர்க்குரிய) பூமாலையால் விளங்காநிற்கும் அர்ஜுனனும்

தன் தேவதத்தம் எனும் சீரார் சங்கு

தன்னுடைய தேவதத்தம் என்னும் பெருமை பொருந்திய சங்கத்தை

சேர்ந்து

(கண்ணனோடு) சேர்ந்து

ஊதினான்

ஊதினான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top