Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

உள்ளபடி யிறையை ற்றெய்த முற்றறஞ்சேர்
தெள்ளறிவில் வந்து நிகழ்பத்தி – வெள்ள
நடையாடும் யோகத்தை நாதனருள் கீதை
யிடையாறோத் தோது மெடுத்து.    0.8

உள்ளபடி இறையை உற்று எய்த

பகவானை உள்ளபடி அறிந்து அறிவிப்பதன் பொருட்டு

முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ்

பரிபூர்ணமான யோகத்தோடு கூடிய தெளிந்த ஞானயோகத்தால் உண்டாகும்

பத்திவெள்ளம் நடையாடும் யோகத்தை

பக்திவெள்ளம் பெருகிவரும் பக்தியோகத்தை

நாதன் அருள் கீதை

ஸர்வஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்

இடை ஆறு ஓத்து

இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்

எடுத்து ஓதும்

அறியும்படி ஓதும்

[இது மேல் எடுத்த கீதார்த்தஸங்க்ரஹம் முன்றாம் ச்லோகத்தின் மொழிபெயர்ப்பு]

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top