Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஞானங் கரும நலஞ்சேர் நிலையதனை
யான மனயோகத் தாராய்ந்திங் – கூனமறத்
தன்னா ருயிருணருந் தன்மையினை நற்கீதை
முன்னாறோத் தோதும் முயன்று.   0.7

ஞானம் கரும நலம் சேர் நிலையதனை

ஞானயோகத்தையும் கர்மயோகத்தையும்

ஆன மனயோகத்து

(அவற்றின் காரியம்) ஆன மாநஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு

ஆராய்ந்து

எண்ணி அநுஷ்டித்து

இங்கு

இவ்வுலகிலேயே

ஊனம் அற

குறைவில்லாமல்

தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை

தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை

நற்கீதை

மிகச்சிறந்த கீதையின்

முன் ஆறு ஓத்து

முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்

முயன்று ஓதும்

உறுதியுடன் ஓதும்

[மேலே எடுக்கப்பட்ட கீதார்த்த ஸங்க்ரஹம் இரண்டாம் ச்லோகத்தின் மொழிபெயர்ப்பு இது.]

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top