Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

சுத்தியார் நெஞ்சிற்றந் தொல்கரும ஞானத்தா
லத்தியா தொன்றை ந்துறந்தோர் – பத்தியா
னண்ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
கெண்ணும் பொருளா மிசைந்து.    0.6

தொல் கரும ஞானத்தால்

பழைமையான உபாயங்களான கர்மயோகத்தாலும் ஞானயோகத்தாலும்

சுத்தி ஆர் தம் நெஞ்சில்

பரிசுத்தியடைந்த தம் நெஞ்சில்

ஒன்றை அ(ர்)த்தியாது

(பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது

அறத்துறந்தோர்

மிகவும் வைராக்யமுடையவர்கள்

பத்தியால்

(முற்கூறிய கர்மஜ்ஞாநவைராக்யங்களாலே உண்டான) பக்தியோகத்தாலே

நண்ணும்

அடையும்

பரமன்

பரப்ரஹ்மமாகிற

நாரணனே

நாராயணனே

நற்கீதைக்கு

மிகச்சிறந்த பகவத்கீதைக்கு

இசைந்து

(அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து

எண்ணும் பொருளாம்

நினைக்கும் பொருளாவான்

[ இப்பாசுரம் கீதார்த்தஸங்க்ரஹம் முதல் சலோகத்தின் மொழிபெயர்ப்பாகும். ]

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top