Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

முன்னஞ் சனகாதி யோகியரு மூண்டியன்ற
வன்ன கருமத்தா லானபயன்-மன்னினர்கா
ணிந்த வுலக மிசைவகையும் பார்த்தியலா
யந்த வுயர்கரும மாய்ந்து.      3.17

முன்னம்

முற்காலத்தில்

சனகாதியோகியரும்

சனகர் முதலான ஞானிகளும்

மூண்டு இயன்ற அன்ன கருமத்தால்

குறிக்கொண்டு செய்யப்படும் முற்கூறிய கர்மயோகத்தாலேயே

ஆனபயன்

(ஞானயோகத்தின்) பயனான ஆத்ம த3ர்ஶனத்தை

மன்னினர் காண்

பெற்றனர் காண்

இந்த உலகம் இசைவகையும் பார்த்து

இவ்வுலகிலுள்ள ஸாமாந்ய ஜனங்களையும் இசையவைக்கும் வழியாகிற லோகஸங்க்ரஹத்தைக் கணிசித்தும்

ஆய்ந்து

(ஞானயோகத்தைக் காட்டிலும் கர்மயோகத்துக்குள்ள சிறப்பை) ஆராய்ந்தும்

அந்த உயர் கருமமும்

(ஞானயோகத்திலும்) சிறந்த அத்தகைய கர்மயோகத்தை

இயலாய்

செய்வாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top