Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆதலினாற் பற்றற் றமரியற்பாய் நின்கரும
நீதகவு தன்னுடனே நின்றியல்வாய் – மீததனைப்
பற்றற் றியன்றாற் பரமா முயிரினையே
பெற்றத்தை நின்றுய்யும் பின்.     3.16

ஆதலினால்

முற்கூறிய காரணங்களால்

பற்றற்று அமர் இயல்பாய்

பற்றில்லாமல் (கர்மங்களில்) பொருந்தி நிற்கும் தன்மையை உடையவனாய்

நின் கருமம்

உன் வர்ணாஸ்ரம தர்மங்களை

நீ

நீ

தகவுதன்னுடனே

இது செய்யத்தக்கது என்னும் நினைவுடனேயே

நின்று இயல்வாய்

(ஆத்மாவைப் பெறும் வரையில்) இடைவிடாமல் செய்வாய்

மீது அதனை

சிறந்ததான அக்கர்மயோகத்தை

பற்றற்று இயன்றான்

பற்றில்லாமல் செய்பவன்

பின்

அதற்குப்பின்

பரமாம்

(பிரகிருதியைக்காட்டிலும்) மேலான

உயிரினையே

ஆத்மாவையே

பெற்று

அடைந்து

அத்தை நின்று

அதிலேயே நிலைநின்று

உய்யும்

உய்வான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top