Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மேலொருவன் செய்த மிகுகருமந் தானெதுவென்
றேலுமதின் மற்றிங் கியல்சனமுஞ் – சாலவவன்
யாதைத்தன னங்க மெனவியலு மிவ்வுலக
மாதைப்பின் செல்லு மமர்ந்து.       3.18

இங்கு

இவ்வுலகில்

மேல் ஒருவன்

(ஞானம் அனுட்டானம் புகழ் ஆகியவற்றால்) சிறந்த ஒருவன்

செய்த

அனுஷ்டித்த

மிகு கருமம் தான்

சிறந்த கர்மம் தான்

எதுவென்றேலும்

எதாயிருந்தாலும்

மற்று சனமும்

மற்ற ஸாமாந்ய ஜனங்களும்

அதில் இயல்

அதிலேயே ஈடுபடுவார்கள்

அவன்

அச்சிறந்தவன்

யாதை

யாதொன்றை

தன் அங்கம் என

தான் அனுஷ்டிக்கும் கர்மத்திற்கு அங்கம் என்று

சால இயலும்

நன்றாக அனுஷ்டிக்கிறானோ

ஆதை

அதையே

இவ்வுலகம்

இந்த உலகினரும்

அமர்ந்து பின் செல்லும்

பொருந்தி அனுஷ்டிப்பர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top