Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

யாது வுலகர்க் கிருளிரவா மாங்குணர்ந்து
போத மருவும் புலன்வென்றோ – னேதி
லுணர்வுறுவ ரீங்கிவர்க ளுற்றுணர்ந்த யோகிக்
கிணரில்லா தாகு மிருண்டு.     2.61

யாது

யாதொரு ஆத்மவிஷயமான அறிவு

உலகர்க்கு

ஸம்ஸாரிகளுக்கு

இருள் இரவாம்

இரவு போல இருண்டு கிடக்கிறதோ

ஆங்கு

அவ்வாத்ம விஷயமான அறிவில்

புலன் வென்றோன்

இந்திரியங்களை அடக்கியவனான ஜ்ஞாநி யோக நிஷ்டன்

உணர்ந்து

ஆத்ம தர்ஶநம் செய்துகொண்டு

போதம் மருவும்

விழிப்புடன் இருப்பான்

இவர்கள்

ஸம்ஸாரிகள்

ஏதில்

எந்த சப்தாதி விஷயங்களைப்பற்றிய அறிவு விஷயத்தில்

உணர்வுறுவர்

(விஷயாநுபவத்தாலே) விழிப்புடன் விளங்குகிறார்களோ

ஈங்கு

இந்த சப்தாதி விஷயமான அறிவில்

உற்று உணர்ந்த யோகிக்கு

ஆத்மாவைப் பார்க்கின்றவனாய் அதை மனனம் செய்யும் ஜ்ஞாநயோக நிஷ்டனுக்கு

இருண்டு

 (அநுபவமில்லாமையாலே) பிரகாசமற்று

இணர் இல்லாதாகும்

இணக்கமாகிற தொடர்பு இல்லாமலிருக்கும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top