Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஏயுமனந் தோய்புலனி லேதுடனா மாதுணர்வை 
வாயு மரத் தோணியென மாய்க்குமால் – தோயும் 
பொருளிடத்து நின்று புலன்மீட்க வாங்கே
தெருளுறைப்புச் சேருஞ் சிறந்து.     2.60

தோய் புலனில்

(விஷயங்களில்) ஈடுபடும் இந்திரியங்களோடு

ஏது மனம் ஏயும்

எந்த மனமானது பொருந்தி நிற்கிறதோ

ஆது

அம்மனம்

உடனாம் உணர்வை

ஆத்ம விஷயமான அறிவை

மரத்தோணி(யை) வாயு என

மரப் படகை (எதிர்த்திசை) வாயுவைப்போலே

மாய்க்குமால்

அழித்துவிடும்

தோயும் பொருளிடத்து நின்றும்

(இந்திரியங்கள்) ஈடுபடும் சப்தாதிவிஷயங்களினின்றும்

புலன் மீட்க

இந்திரியங்களை இழுத்தவுடன்

ஆங்கே

அப்போதே

தெருளுறைப்பு சிறந்து சேரும்

ஸ்திதப்ரஜ்ஞநிலை சிறப்புடன் பொருந்தும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top