Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தன்விரும்பித் தன்னுகந்து தன்னமைந்த ஞானிக்குப்
பின்விரும்பிச் செய்கருமம் பெற்றில்லை – முன்விரும்பிச்
செய்தத்தா லொன்றில்லை செய்யாத தாலில்லை
வையத்தா தும்பயனின் மற்று.    3.15

தன் விரும்பி

தன் ஆத்மாவிலேயே ஈடுபட்டு

தன் உகந்து

அதனாலேயே திருப்தியடைந்து

தன் அமைந்த

அதிலேயே ஸந்தோஷமடைந்த

ஞானிக்கு

ஆத்ம தர்ஶனம் கைவந்தவனுக்கு

பெற்று பின்

ஆத்ம தர்ஶனம் பெற்ற பின்

விரும்பிசெய் கருமம் இல்லை

ஆசைப்பட்டுச் செய்யக்கூடிய கருமம் ஒன்றும் இல்லை

முன் விரும்பி

மேல் விழுந்து ஆசைப்பட்டு

செய்தத்தால்

செய்த கருமத்தால்

ஒன்று இல்லை

ஒருபயனும் இல்லை

செய்யாததால்

(கருமங்களைச்) செய்யாததால்

இல்லை

தீங்கு இல்லை

தீங்கு இல்லை

மேலும்

வையத்து

இவ்வுலகிலுள்ள பிராகிருதப்பொருள்களுள்

ஆதும்

எதுவும்

பயன இல்

(அவனுக்குப்) பயனாக ஆகாது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top