Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இப்படியே யீங்கமைந்த சக்கரத்தை யேவன்றான்
மெய்ப்படியே தான்சென்று மேவலுறா – னெப்படியும்
பாவியுயி ராகிப் பழுதே படர்பொறிப்பட்
டாவி சுமப்பா னவன்.     3.14

இப்படியே

இப்படியே

ஈங்கு அமைந்த

இவ்விஷயத்தில் பொருந்திய

சக்கரத்தை

சக்கரம்போன்ற கார்ய காரண நடைமுறையை

ஏவன்தான்

எவனொருவன்

மெய் படியே

முற்கூறிய உண்மையின் படி (யஜ்ஞங்களைச்செய்து)

தான் சென்று மேவல் உறான்

தானும் பொருந்திச் சுழலச் செய்யாமலிருக்கிறானோ

அவன்

அவன்

எப்படியும்

எல்லா வகையிலும்

பாவி உயிர் ஆகி

பாவ சம்பந்தமுடைய ஆயுளை உடையவனாய்

படர் பொறி பட்டு

(விஷயங்களில) படர்ந்துசெல்லும் இந்திரியங்களில் அகப்பட்டு

பழுதே ஆவி சுமப்பான்

வீணாக உயிரைச் சுமந்து திரிவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top