Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பகவத் கீதை வெண்பா
(ஒன்பதாம் அத்தியாயததின ஸாரத்தைக் கூறும் பாசுரம)

மன்னியசீா்க் கீதை மருவொன்ப தாமோத்துப்
பன்னியுரை செய்த பயில்பொருள்க – ளின்னே
யிறையுயா்த்தி ஞானிநல மேற்றியலும் பத்தி
முறைவிதிக்க லாய்ந்தோ முடிந்து.        9.34A

மன்னிய சீர் கீதை

நிலைநின்ற பெருமையுடைய கீதையில்

மருவு ஒன்பதாம் ஓத்து 'பன்னி உரைசெய்த பயில் பொருள்கள்

பொருந்தி நிற்கும் ஒன்பதாம் அத்தியாயத்தில் பலகால் சொல்லப்பட்ட நல்ல அர்த்தங்களான

இறை உயர்த்தி

ஸா்வோஸ்வரனான நாராயணனின் பெருமை

ஞானி நலம்

மஹாத்மாக்களின் சிறப்பு

ஏற்று இயலும் பத்தி முறை விதிக்கல்

ஸாதனமாகக் கைக்கொண்டு ஒழுகும் பக்தியின்முறையைக் கூறுதல் (ஆகிய மூன்றையும்)

இன்னே

இவ்வண்ணமாக

முடிந்து ஆய்ந்தோம்

நிஷ்கா்ஷித்து விளக்கினோம்

வாதிகேஸரி ஜீயர் அருளிய பகவத் கீதை வெண்பாவில் ஒன்பதாம் அத்தியாயம் நிறைவுபெற்றது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top