Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பார்த்தவெனைப் பற்றினாற் பாவம் பயில்பிறவிச் 
சோர்த்தபெண் வைச்சியருஞ் சூத்திரரும-போ்த்து
வினையடையார் வீடெய்தி மேற்கதியா மின்பந்
தனையடைவா் சென்று தழைத்து.       9.32

பார்த்த

குந்தீபுத்திரனே!

பாவம் பயில் பிறவி சோர்த்த

பாவத்தினால் ஏற்பட்ட பிறப்பையடைந்து சோர்வுற்ற

பெண்

ஸ்த்ரீகளும்

வைச்சியரும்

வைஸ்யர்களும்

சூத்திரரும்

ஸுதராகளும்

எனை

என்னை

பற்றினால்

ஆஸ்ரயித்தால்

போதது

மறுபடியும்

வினை அடையார்

பாபத்தையும் அதுகாரணமாக ஏற்படும் ஸம்ஸாரத்தையும் அடையாமல்

சென்று

(அப்ராக்ருத லோகத்திற்குச்) சென்று

தழைத்து

சிறப்புற்று

வீடு எய்தி

மோக்ஷததை அடைந்து

மேற்கதியாம் இன்பமதனை

பரமாத்மாநுபவமாகிற பேரின்பத்தை

அடைவர்

அடைவார்கள்

ஆனாத புண்ணியத்தா

அழியாத புண்ணியம செய்து சிறந்த பிறப்பெடுத்தவர்களாய்

அன்பராம்

என்னிடம் பக்தியை செய்யும்

அந்தணர்கள்

பிராமணகர்ளும்

ஞானாதிக அரசர்

அறிவிற சிறந்த அரசர்களான ராஜரிஷிகளும்

நண்ணெளிது தானாமால்

என்னை அடைவது மிக எளிதன்றோ

மாயும்

நிலைநில்லாததாய்

இத்துன்புலகை

துன்பமயமான இவ்வுலகை

மன்னிய நீ

அநாதிகாலமாகச் சோ்ந்திருக்கும் நீ

ஆங்கு

மோக்ஷத்தின பொருட்டு

என்னை அடைந்து ஆயும் இத்தன்மை

என்னை ஆஸ்ரயித்து பகதி செய்வதாகிற இத்தன்மையை

அறி

அறிவாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top