Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தேவா் தமையணைந்தார் சென்றடைவ ராங்கவரை
யாவா் பிதுக்கள்பா லாங்கணைந்தார்- மேவுவரப்
பூதத்தை யாங்கணைந்தார் பொன்றாது சோ்வரெனைப்
பாதத் தணைந்தாரென் பால்.       9.25

தேவர் தமை அணைந்தார்

தேவர்களை யாகங்களால் ஆராதிப்பவர்கள்

ஆங்கு சென்று அவரை அடைவர்

அத்தேவருலகம் சென்று அவர்களை அடைவர்

யாவர் பிதுக்கள் பால் ஆங்கு அணைந்தார்

எவர்கள் பிதருக்களை (அவர்களுக்குரிய) யாகங்களால் ஆராதிக்கிறார்களோ

ஆங்கு சென்று அவரை அடைவர்

அவர்கள் அப்பித்ருக்களின் உலகம் சென்று அப்பித்ருக்களை அடைவர்) 

பூதத்தை அணைந்தார்

பூதங்களைக் குறித்து யாகம் முதலானவை செய்து ஆராதிப்பவர்கள்

அப்பூதத்தை ஆங்கு மேவுவர்

அந்த பூதங்களை பூதலோகத்தில் அடைவர்

என் பால் அணைந்தார்

(அதே யஜ்ஞம் முதலானவற்றால்) என்னை ஆராதிப்பவர்கள்

பொன்றாது

அவர்களைபோல அழியாமல்

எனை பாதத்து சோ்வர்

என் திருவடிகளை அடைவர் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top