Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

வேறின்றி யென்னையெவர் மெய்ந்நினைந்து சேவிப்பார்
பேறொன்றி யென்றும பிரியாதே  தேறுமவர்
தம்பேறாம் யோக மிதுபிரியாச் சேமநான்
வன்பேறாச் செய்வன் மகிழந்து.       9.22

வேறின்றி

(என்னை நினைப்பது தவிர) வேறு பயனில்லாதவர்களாய்

என்னை மெய் நினைந்து

என்னை உள்ளபடி நினைப்பவர்களாய்

எவா

எந்த மஹாத்மாக்கள் பேறு

ஒன்றி சேவிப்பார்

எல்லாக் கல்யாண குணங்களோடும் எல்லா விபூதிகளோடும் முழுமையாகப் பொருந்தி உபாஸிக்கிறார்களோ

என்றும் பிரியாதே தேறும் அவர் தம்

என்னோடு எப்போதும் பிரியாமல் சேர்ந்திருப்பதை விரும்பும் அவர்களுடைய

பேறாம் யோகம்

(என்னை அடைவதாம்) பயனாகிற யோகத்தையும்

இது பிரியாச் சேமம்

(மறுபடியும் ஸம்ஸாரத்துக்குத் திரும்பி வராமையாலே ) இப்பேறு அழியாமையாகிற க்ஷேமத்தையும்

நான்

நான்

வன் பேறா

(எனக்குப்) பெரிய பேறாக

மகிழந்து செயவன்

மகிழ்ச்சியோடு செய்வேன் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top