Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இந்த மறைப்பொருளை யென்பாற பொறாமையிலாச் 
சிந்தை திகழுனக்குச் செப்புகே-னெந்த
வறிவை யறிவகைசர்ந் தவ்வறிவு தப்பாச்
செறிவில் வினைவிடுதி தீர்ந்து.       9.1

எந்த அறிவை

எந்த உபாஸனரூபமான அறிவை

அறிவகை சோ்ந்து

அவ்வுபாஸனத்தின் வகைகளைப்பற்றிய அறிவோடு கூட அறிந்து

அவ்வறிவு தப்பாச செறிவில்

 அவ்வறிவு நழுவாதபடி அனுஷ்டானமீறாக நிறைவடைந்ததாகில்

வினை தீர்ந்து விடுதி

(என்னை அடைவதற்குத் தடையான) புண்யபாபங்களனைத்திலிருந்தும் விடுபடு வாயோ

இந்த மறைபொருளை

இந்த அதிரஹஸ்யமான அரத்தத்தை

என்பால் பொறாமையிலா சிந்தை திகழ உனக்கு

என்னிடம் பொறாமையில்லாத மனத்தோடுகூடிய உனக்கு

செப்புகேன்

சொல்லுவேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top