Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

எஞ்சாத சீலத் தியோகஞ் செறிந்தியலு 
நெஞ்சால்வே றொன்றை நினையாதே – துஞ்சாத
தன்னினைவாற் செல்வந் தருபரம பூருடனா
மென்னியல்வே வந்தடையு மிங்கு.      8.8

எஞ்சாத சீலத்து

விடாமல் என்னை நினைப்பதாகிற அப்யாஸத்தையும்

யோகம்

என்விஷயமான பக்தி யோகமாகிற உபாஸனத்தையும்

செறிந்து இயலும் நெஞ்சால்

நெருங்கிச் சேர்ந்திருக்கும் நெஞ்சாலே

வேறொன்றை நினையாதே

வேறொன்றையும் நினையாமல்

துஞ்சாத தன் நினைவால்

(பின்வருமாறு கடைசிக்காலத்தில்) மறவாமல் என்னை நினைப்பதால்

இங்கு

இந்த லீலா விபூதியில்

செல்வம் தரு பரம பூருடனாம் என் இயல்வே வந்து அடையும்

அனைவர்க்கும் செல்வத்தை அளிக்கும் பரமபுருஷனான எனது ஐஸ்வர்யத்தோடு கூடிய நிலையே (நினைப்பவனுக்கு) வந்துசேரும்

Scroll to Top