Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

வேதத்தில் வேள்வியினின் மெய்த்தவத்திற் றானத்தில் 
ஓதும் பயனதனை யுற்றொழிந்து – மீதுபோய்
இந்த வறிவமரும் யோகிதான் மேன்முதலா
மந்த நிலமடையு மங்கு.            8.27

இந்த அறிவு அமரும் யோகிதான்

இவ்விரு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்ட என் பெருமையை அறியும் ஞானி

வேதத்தில்

வேதங்களை ஓதுவதற்கும்

வேள்வியினில்

யஜ்ஞங்களை அநுஷ்டிப்பதற்கும்

மெய்த்தவத்தில்

உண்மையான தவங்களை அநுஷ்டிப்தற்கும்

தானத்தில்

தானம் செய்வதற்கும்

ஓதும் பயன் அதனை

(ஸாஸ்த்ரங்களில்) ஓதப்படுகிற அப்பயன்களையெல்லாம்

உற்றொழிந்து மீது போய்

அடைந்து அதற்கும் மேலே போய்

அங்கு

மறுமையில்

அந்த மேல் முதலாம் நிலம் அடையும்

சாஸ்த்ர ப்ரஸித்தமாய் மேலானதாய் அநாதி யானதான பரமபதத்தை அடைவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top