Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

புண்ணியஞ் செய்புருடர் யார்க்கும் புணர்பாவ
நண்ணியிருந் தான்முடிவை நன்றாகத்-திண்ணியராய்
நின்றவர்க ளவ்விருமை நீங்கும்பே றென்னையே
யொன்ற வுகந்தடைவ ருற்று.          7.28

புண்ணியம் செய் புருடர் பார்க்கும்

புண்ணியச் செயல்களை மிகுதியாகச் செய்த எந்த ஜீவர்களுக்கும்

புணர்பாவம் முடிவை நன்றாக நண்ணியிருந்தால்

அவர்கள் செய்த பாவங்கள் அழிவை மேன்மேலே நெருங்கியிருந்தால்

அவ்விருமை நீங்கும் பேறு நின்றவர்கள்

(அவர்களது புண்ணியத்திற்கேற்ப) அந்த இரட்டைப் பயன்கள் சிறிது சிறிதாக நீங்கப்பெற்றவர்கள்

திண்ணியராய்

(புண்ணியத் தின் மிகுதிக்கேற்ப ஐஸ்வர்யம், கைவல்யம், பகவத் ப்ராப்தி ஆகியவற்றைப் பெறவேண்டுமென்று) உறுதி ஸங்கல்பமுடையவர்களாய்

என்னையே உற்று

என்னையே அப்பலன்களுக்குப் பலப்ரத ஸாதனமாகக் கொண்டு

ஒன்ற உகந்து அடைவர்

ஒருமனப்பட்ட பக்தியை (அவற்றுக்குப் பலகரண ஸாதனமாக) அநுஷ்ட்டிப்பர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top