Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நன்றறிவ னானே நாடோறும் பூதங்கள்
சென்று நிகழ்ந்துவருஞ் செம்பொருள்க-ணின்றிவற்று
ளொன்று மெனையுணர மாட்டா துளதன்றே
குன்றுயர்ந்த தோளாய் குறி.           7.26

குன்று உயர்ந்த தோளாய்

மலைபோல் உயர்ந்த தோளை உடையவனே!

சென்று நிகழ்ந்து வரும் செம்பொருள்கள் பூதங்கள்

இறந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், வருங் காலத்திலுமுள்ள நற்பொருள்களாகிற ஸம்ஸாரி ஜீவர்கள் அனைவரையும்

நாள்தோறும்

எப்போதும்

நானே நன்று அறிவன்

நான் ஒருவனே நன்றாக அறிவேன்

இவற்றுள் ஒன்றும் எனை

இந்த ஜீவர்களில் ஒருவர்கூட என்னை

நின்று உணரமாட்டாது உளதன்றே

நிலைநின்று நன்றாக அறியமாட்டாமல் உள்ளனரன்றோ

குறி

இதைக் குறித்துக் கொள்வாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top