Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

புண்ணியமார் பல்பிறவி பூண்டியன்றோ னந்தத்து
நண்ணியுணர் வென்னை நயந்தடையு மெண்ணியுயிர்க்(கு)
எல்லாமும் வாசுதேவ னேதா னெனவுணர்ந்த
நல்லான் மிகவரிய னாட்டு.        7.19

புண்ணியம் ஆர் பல்பிறவி பூண்டு இயன்றோன்

புண்ணியம் நிறைந்த பல பிறவிகளை எடுத்து உயர்ந்தவனே

அந்தத்து

கடைசியில்

உணர்வு நண்ணி

(மிகச் சிறந்த) அறிவை அடைந்து

‘உயிர்க்(கு)

ஜீவாத்மாக்களுக்கு

எல்லாமும் வாசுதேவனேதான் என எண்ணி

வாஸுதேவநே பரமப்ராப்யமாகவும், ப்ராபகமாகவும், தாரகம், போஷகம், போக்யம் முதலான எல்லாமாகவும் இருக்கிறான்’ என்று எண்ணி

என்னை நயந்து அடையும்

என்னையே விரும்பி அடைவான்

நாட்டு

இவ்வுலகினில்

உணர்ந்த நல்லான்

இப்படி அறிவு பெற்ற மஹாத்மா

மிக அரியன்

(எனக்கும்) மிகவும் கிடைத்தற்க்கு அரியவன் ஆவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top