Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

[ஏழாம் அத்தியாயத்தின் சுருக்கம்]

ஆங்குமுத லேழாமோத் தன்புக் கிலக்காகு
மோங்குமிறை மாயத் தொழிக்குமப்-பாங்கிற்
சரண நெறியடைந்தார் தம்பேத ஞானி
யரணுயர்வு சொல்லு மமைந்து.     7.0B

ஆங்கு முதல்

அந்த மத்யமஷட்கத்தில் முதல் அத்தியாயமான

ஏழாம் ஓத்து

ஏழாம் அத்தியாயம்

அன்புக்கு இலக்காகும் ஓங்கும் இறை

பக்திக்கு விஷயமாகும் தலைசிறந்த ஸர்வேஸ்வரனையும்

மாயம்

(அவனை ஜீவனுக்கு மறைக்கும்) ப்ரக்ருதியையும்

ஒழிக்கும் அப்பாங்கில் சரண நெறி

(அம்மறைவைப்) போக்கடிக்கும் தன்மையை உடைய சரணாகதியையும்

அடைந்தார் தம் பேதம்

உபாஸிப்பவர்களின் (நாலு வகையான) உட்பிரிவையும்

ஞானி அரண் உயர்வு

(அந்நால்வரில்) ஞானி (எம்பெருமானுக்கே) தாரகனாயிருக்கும் சிறப்புற்றவன் என்பதையும்

அமைந்து சொல்லும்

நன்றாகக் கூறும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top