Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

சீத மழலின்பந் துன்பஞ் சிறப்பிகழ்வின் 
மீதமைவு சேர்ந்துமிக வென்றுமனம் – போதம்
திகழ்ந்தவவ னெஞ்சிற் றெளிவுறவே நிற்கு(ம்)
நிகழ்ந்த வுயிர்பரமா நேர்ந்து.        6.7

சீதம் அழல்

குளிர் உஷ்ணம்

இன்பம் துன்பம்

ஸுகம் துக்கம்

சிறப்பு இகழ்வின் மீது

மதித்தல் அவமதித்தல் ஆகிய இரட்டைகளின் மேல்

அமைவு சேர்ந்து

ஒருபடியாகப் பொருந்தி நின்று

மனம் மிக வென்று

மனத்தை மிகவும் வெற்றிகொண்டு

போதம் திகழ்ந்த அவன்

அறிவு திகழும் அவனுடைய

நெஞ்சில்

மனத்தில்

நேர்ந்து பரமா நிகழ்ந்த உயிர்

ஸூக்ஷ்மமாய் மேலாயிருக்கும் ஜீவாத்மா

தெளிவுறவே நிற்கும்

தெளிவாக விளங்குவான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top