Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

எவன்றன்னாற் றன்னெஞ்ச மேன்றுவெலப் பட்ட
தவன்றனக்கந் நெஞ்ச முறவாகும – அவன்றன்னா
லான்றநெஞ்சில் வாதவனுக் காங்கதுமா றேயியலு
மேன்ற பகைவன்போ லிங்கு.        6.6

எவன் தன்னால்

எந்த மனிதனால்

தன் நெஞ்சம்

தன் மனம்

ஏன்று வெலப்பட்டது

(விஷயங்களில் செல் லாமல்) இழுத்து வெல்லப்பட்டதோ

அவன் தனக்கு

அவ்வாத்மாவுக்கு

அந்நெஞ்சம்

அந்த மனம்

உறவாகும்

உறவினன் ஆகும்

அவன் தன்னால் ஆன்ற நெஞ்சு இல் லாதவனுக்கு

தன்னால் அடக்கப்பட்ட மனத்தை உடையவனாயிராதவனுக்கு

ஆங்கு அது

அந்த மனமே

ஏன்ற பகைவன்போல்

நிலைநின்ற எதிரியைப்போல்

இங்கு

இவ்வுலகில்

மாறே இயலும்

நன்மைக்குத் தடையாகவே செயல்படும் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top