Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

என்றன்மை யாலுயிர்களெங்குமெனைக் கண்டவற்றைத் 
தன்றன்மை யாலென்பாற் றான்காண்பான் – சிந்தையினில்
நான்றோன்றா வாறில்லை நன்குணர்ந்தான் என்னிடையிற்
றான்றோன்றா வாறில்லை தான்.         6.26

உயிர்கள் எங்கும்

எல்லா ஆத்மாக்களிலும்

என் தன்மையால்

என் தன்மையிருப்பதால்

எனை கண்டு

என்னைக் கண்டு

அவற்றை

அந்த ஜீவாத்மாக்களை

தன் தன்மையால்

அவற்றின் தன்மையிருப்பதால்

என்பால் தான் காண்பான்

என்னிடம் தான் காண்பவனுடைய

சிந்தையினில்

நெஞ்சிலே

நான் தோன்றாவாறில்லை

நான் தோன்றாமற் போவதில்லை

நன்கு உணர்ந்தான் தான்

( என்னோடு தனக்குள்ள ஸாம்யத்தை ) நன்கு அறிந்தவன் தானும்

என்னிடையில்

என் நெஞ்சில்

தோன்றாவாறில்லை தான்

தோன்றாமற் போவதில்லை 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top