Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நன்னெஞ்சன் றோழன் பகைவ னயப்பறியான் 
பன்னு நடுவோன் பழிவெறுப்போன் – றன்னளவி
லுற்றா ருயர்கருமர் பாவிகளா லொத்தமனம்
பெற்றான் மிகத்தக்கான் பின்.         6.9

பின்

மேலும்

நல் நெஞ்சன்

நன்மை விரும்பி

தோழன்

நண்பன்

பகைவன்

எதிரி

நயப்பு அறியான்

நன்மை (தீமை)களில் தொடர்பு இல்லாதவன்

பன்னு நடுவோன்

புகழத்தக்க நடுநிலையாளன்

பழி வெறுப்போன்

பழிக்கத்தக்க இயற்கை வெறுப்பை உடையவன்

தன்னளவில் உற்றார்

தன்னிடம் இயற்கையன்புடையவர்கள்

உயர்கருமர்

நற்கருமமே செய்யும் நல்லோர்

பாவிகளால்

தீயகருமமே செய்யும் பாவிகள் ஆகிய இவர்கள் அனைவரிடத்திலும்

ஒத்த மனம் பெற்றான்

ஒத்த நெஞ்சை உடையவன்

மிக தக்கான்

(யோகாபயாஸம் செய்யத்தக்கவர்களில்) மிகச் சிறந்தவன் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top