Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

கோலும் புலன்பொருளில் கூட்டுங் கருமத்தி 
லேலு நசையறுத்தா னெப்பொழுது – மேலுயர்ந்தே
யெப்பொருளின் சங்கற்பம் விட்டேறும் யோகியென
வப்பொழுதே பேருடைய னாம்.      6.4

புலன் கோலும் பொருளில்

இந்திரியங்கள் விரும்பும் ஸப்தாதி விஷயங்களிலும்

கூட்டும் கருமத்தில்

அவ்விஷயங்களோடு இவனைச் சேர்ப்பிக்கும் கர்மங்களிலும்

ஏலும் நசை

ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும் பற்றை

எப்பொழுது அறுத்தான்

எப்பொழுது அறுக்கிறானோ

மேல் உயர்ந்து

அந்நிலைக்கும் மேலே சென்று

எப்பொருளின் சங்கற்பம் விட்டு (எப்பொழுது) ஏறும்

பிராகிருதமான எல்லாப்பொருள்களைப்பற்றியும் மநோரதங்களையும் கைவிட்டு எப்போது உயர்ந்ததான ஆத்மவிஷயத்திலேயே ஈடுபடுகிறானோ

அப்பொழுதே

அப்போதே

யோகி என பேர் உடையனாம்

யோகம் கைவந்தவன் என்னும் பெயரை உடையவனாகிறான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top