Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அண்ணலைப்பின் கேட்டா னமர்விசய னீயுரைத்த 
வெண்ணமரு மொப்பா ரெழில்யோகந் – திணணமிது
மன்னு நிலைமை மதுசூத னாகாணே 
னுன்னுமனஞ் சஞ்சலததா லோர்த்து.       6.29

பின்

இப்படிக் கண்ணன் கூறியவுடன்

அமர் விசயன்

போரில் வெற்றியே அடையும் அர்ஜுனன்

அண்ணலை

ஸ்வாமியான கண்ணனை

கேட்டான்

பின்வருமாறு கேட்டான்

மதுசூதனா

மதுவை அழித்தவனே!

நீ உரைத்த

உன்னால் உரைக்கப்பெற்றதாய்

எண் அமரும்

அனைவராலும் மதிக்கத்தக்கதாய்

ஒப்பு ஆர்

ஸமதர்ஸனம் நிறைந்ததான

எழில்யோகம்

அழகிய யோகத்தை

ஓர்த்து

ஆராய்ந்து பார்க்குமளவில்

உன்னும் மனம் சஞ்சலத்தால்

(ஆத்மாவை) தியானிக்கவேண்டிய மனம் நிலைநில்லாமையால்

இது

இந்த யோகம்

திண்ணம

உறுதியாக

மன்னும் நிலைமை

நிலை நிற்கும் தன்மையுடையதாயிருப்பதை

காணேன்

நான் காணவில்லை

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top