Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

கூரறிவு சேர்துறவென் றெத்தைக் குறித்துரைப்பா 
பேரறிவில் யோகமதாம் பாண்டவனே – தூரநசை
விட்டியலா தானொருவன் மெய்கரும யோகியெனப்
பட்டியல மாட்டான் பயின்று.        6.2

பாண்டவனே!

பாண்டுவின் பிள்ளையே!

கூர் அறிவு சேர் துறவு என்று எத்தைக் குறித்து உரைப்பர்

கூர்மையான அறிவை ஸ்வரூப நிரூபகமாகக்கொண்ட ஜ்ஞாநயோக என்று எதைக்குறித்து அறிவாளிகள் வழங்குவரோ

பேர் அறிவில் யோகம் அதாம்

பெரிய அறிவைத் தன்னுள் அடக்கிய கர்மயோகமே அதுவாகும்

பயின்று

மிக முயன்று

நசை தூர விட்டு இயலாதான் ஒருவன்

(தேஹத்தில் ஆத்மா வென்னும்) அபிமானத்தை அடியோடு கைவிட்டிராதவன் எவனும்

யோகி எனப்பட்டு இயலமாட்டான்

கர்மயோகம் செய்பவன் எனப்படத் தகாதவனாவான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top