Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131
Skip to content
கர்மங்களுக்குரிய ஸ்வர்க்கம் முதலிய தாழ்ந்த பலன்களை விரும்பாமல்
காரியம் என்று உன்னி
(கர்மயோகமே) ஸ்வயம்ப்ரயோஜநம் என நினைத்து
அவ் அத்தன்மையும்
(ஆத்மாக்களும் அதன் ஸாக்ஷாத்காரமும் நித்யம். தோஹாதிகளும், அவற்றோடு ஆத்மா தொடர்புடைய ஸ்வர்க்காதிகளும் அநிதயம் ஸ்வதந்த்ர கர்த்தாவல்லன் என்னும்) அந்தந்த அநுஸந்தானங்களையும்
அத்தூய் மனத்தில் சார்ந்து
அப்படிப்பட்ட (கர்மாநுஷ்டானத்தால்) பரிசுத்தமான மனத்தில் கொண்டு
இயல்வான்
கர்மயோகத்தையே அநுஷ்டிப்பவன் (எவனோ)
அவன் நன்மை அமர் ஞானி
அவனே நன்மை மிக்க ஜ்ஞாந யோகத்தையும் செய்பவன்
அவன் யோகி
அவனே கர்ம யோகத்தையும் செய்பவன்
என்றும் சமைந்து
எப்போதும் (முற்கூறிய) மனப்பக்குவமுடையவனாய்
நல் அங்கியில் கிரிசை தான் இகழான்
நல்ல அக்னியோடு தொடர்புடைய யாகம் முதலான ஸ்ரௌத ஸ்மார்த்த கர்மங்களை இகழ்ந்து கைவிடமாட்டான்