Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

காத லதுவிட்டுக் கருமம் பிரமமெனு 
மூதுயிரிற் றானமைத்து முற்றியல்வான்-றீதான
பாவத்தின் மன்னான் பதுமத் திலைநீரின்
மேவப் படாததுபோன் மிக்கு.     5.9

காதல் அது விட்டு

(அவ்வக்கர்மங்களின் பலன்களான சுவர்க்கம் முதலானவற்றில்) பற்றாகிற அதைவிட்டு

கருமம்

(தான் செய்யும்) மூச்சுவிடல் முதலான கர்மங்களை

பிரமம் எனும் மூதுயிரில் தான் அமைத்து

பெரிதாயிருக்கையாலே பிரமம் எனப்படும் பிரகிருதியின் காரியமான பழமையான பிராணன் முதலான (முற்கூறிய ) இந்திரியங்களில் முற் கூறிய வகையில் வைத்து (அவற்றிலேயே கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து)

முற்று இயல்வான்

(நானாக ஒன்றும் செய்கின்றேனலலேன் என்னும் அநுஸந்தானத்துடன்) கர்மங் களில் முழுமூச்சுடன் ஈடுபடுகின்றவன்

பதுமதது இலை

தாமரையின் இலை

நீரின் மிக்கு மேவப்படாதது போல்

நீரினால் பசையுண்டாகுமளவுக்குத் தொடப்படாததுபோல்

தீதான

ஸம்ஸாரத்தில் கட்டிவைக்கையாகிற தீமை பயக்கும்

பாவத்தில் மனனான்

தேஹாத்ம மயக்கமாகிற பாவத்தினால் தொடப்படமாட்டான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top