Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆங்கு விசயன்றா னாதித்தன் முன்பிறந்தா 
னீங்குநீ பின்பிறந்தா யெங்ஙனநான – பாங்கினினீ 
முன்னுரைசெய் வணணமிது முற்றுணர்வ னென்றுரைக்கத் 
தன்னுரைசெய் தான்பரமன்றான்.      4.4

ஆங்கு

அந்த சமயத்தில்

விசயன் தான்

அர்ஜுனானவன்

ஆதித்தன்

ஸூர்யன்

ஈங்கு

இவ்வுலகில்

முன் பிறந்தான்

முதலில் பிறந்தான்

நீ

(கண்ணனாகிய) நீ

பின் பிறந்தாய்

பிற்காலத்தில் பிறந்தாய்

பாங்கினில்

அழகாக

முன் நீ உரைசெய் வண்ணம் இது

முற்காலத்தில் (ஸூர்யனுக்கு) நீ உபதேசித்தாயென்கிற இவ்வர்த்தத்தை

எங்ஙனம்

எவ்வண்ணமாக

நான்

நான்

முற்று உணர்வன்

முழுவதும் உணர்வேன்

என்று உரைக்க

என்று கேட்க

பரமன் தான்

பரமாத்மாவான கண்ணன்

தன் உரை செய்தான்

தன்னைப்பற்றிய உண்மையைக் கூறலுற்றான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top