Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஏது மிழிசா வெனைக்கரும மென்றெனக்கிங்
கோது பயனாசை யொன்றிலையென் – றீ துணர்ந்தே
யென்னை மிகவறிவான் யாவ னவன்கண்டாய்
முன்னை வினையகல்வான் முற்று.     4.14

கருமம்

படைத்தல் முதலான செயல்கள்

எனை

(ஸர்வேஸ்வரனான) என்னை

ஏதும் இழிசா

ஒரு சிறிதும் கட்டுப்படுத்தமாட்டா

என்று

என்றும்

எனக்கு

(அவாப்த ஸமஸ்தகாமனான) எனக்கு

இங்கு ஓது பயன் ஆசை ஒன்று இல்லை

இச்செயல்களுக்குச் சொல்லப்படும் பயனில் விருப்பம் சிறிதும் இல்லை

ஈது உணர்ந்தே

இவ்விரண்டையும் அறிந்து

என்னை

என்னை

செய்யேனா

செய்யாதவனாகவும்

மிகுத்தே

(அவற்றைச் செய்வதால் தோஷமின்மையாகிற) பெருமையை யுடையவனாகவும்

எனை

என்னை

மிக அறிவான்

நன்கு அறிகிறவன்

யாவன்

எவனோ

அவன்

அவனே

முன்னை வினை

அநாதிகாலமாக (கர்மயோகத்தின் தொடக்கத்திற்குத் தடையாக) உள்ள பாபங்களினின்றும்

முற்று

முழுவதும்

அகல்வான் கண்டாய்

விடப்படுவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top