Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

வண்ணங்க ணாலு மருவுங் குணங்களுடன்
பண்ணுங் கருமம் பலவகையா-வெண்ணி
வகுத்தேயான் செய்திடினு மற்றதுசெய் யேனா
மிகுத்தே யெனைநீ  வெறு.    4.13

வண்ணங்கள் நாலும்

நாலு வருணங்களை முன்னிட்ட உலகனைத்தையும்

மருவும் குணங்களுடன்

அவ்வவற்றுக்குப் பொருந்திய (ஸத்வம் முதலான) குணங்களோடும்

பண்ணும் கருமம்

(அவையவை) செய்யவேண்டிய செயல்களோடும்

பலவகையா வகுத்தே

பல வகைப்பட்டதாக பிரித்தே

யான்

ஸர்வேஸ்வரனான நான்

எண்ணி

ஸங்கல்பித்து

செய்திடினும்

செய்தபோதிலும்

மற்று அது

அப்படைப்பு முதலானவற்றை

செய்யேனா

செய்யாதவனாகவும்

மிகுத்தே

(அவற்றைச் செய்வதால் தோஷமின்மையாகிற) பெருமையை யுடையவனாகவும்

எனை

என்னை

நீ

நீ

வெறு

மனத்திற் கொள்வாய்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top