Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இந்தயோ கத்தை யிரவிக்கு யானுரைத்தேன் 
வந்த வவன்மனுவுக் காங்குரைத்தான் – மைந்தனா 
மிக்குவா குக்கவனு மேன்றுரைத் தானிப்படியாற்
றக்குவாய்ந் துற்றது தான்.    4.1

இந்த யோகத்தை

இந்த கர்மயோகத்தை

இரவிக்கு

ஸூர்யனுக்கு

யான்

(பரமபுருஷனான) நான்

உரைத்தேன்

(முற்காலத்தில்) உபதேசித்தேன்

வந்த அவன்

(இவ்வுபதேசம்) கைவந்த அந்த ஸூர்யன்

மனுவுக்கு

(தன் பிள்ளையான) வைவஸ்வதமனுவுக்கு

ஆங்கு

அக்காலத்தில்

உரைத்தான்

உபதேசித்தான்

அவனும்

அந்த மனுவும்

மைந்தன் ஆம் இக்குவாகுக்கு

தன் பிள்ளையான இக்ஷ்வாகுவுக்கு

ஏன்று உரைத்தான்

நன்கு உபதேசித்தான்

இப்படியால்

இவ்வண்ணமாக

தான்

இக்கர்மயோகம்

தக்கு வாய்ந்து உற்றது

தக்கபடி தகப்பன் பிள்ளை என்னும் பரம்பரையாலே உபதேசிக்கப்பெற்று வந்தது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top