Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

வேள்வியுடன் மானிடரை வேதாப் படைத்துமுனங்
கேள்வி யவர்க்குரைத்தான் கேண்மையுட-னூழ்வினையா
மித்தாலே துய்பய னுற்றிடுமி னுங்களுக்கிங்
கெத்தாலு மின்பளிக்கு மீது.     3.8

வேதா

ஸர்வேஶ்வரன்

முன்னம்

ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில்

வேள்வியுடன்

யஜ்ஞத்தோடு கூட

மானிடரை

மனிதர்களை

படைத்து

ஸ்ருஷ்டித்து

அவர்க்கு

அவர்களுக்கு

கேண்மையுடன்

அன்புடன்

கேள்வி உரைத்தான்

வேதார்த்தமான பின்வரும் வாக்கியத்தை உரைத்தான்

ஊழ் வினையாம் இத்தாலே

பழைமையான இந்த யஜ்ஞத்தாலே

துய்பயன் உற்றிடுமின்

ஸம்ருத்தியைப் பெறுங்கள்

ஈது

இந்த யஜ்ஞம்

உங்களுக்கு

உங்களுக்கு

இங்கு

ஸாதனதசையில்

எத்தாலும் இன்பு அளிக்கும்

எல்லா வகையிலும் இன்பத்தை அளிக்கும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top