Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தன்னியல்வுக் கீடாகத் தானியலும் பேரறிவு
மன்னியவ னானவனு மற்றெவையு – மந்நிலையே
தன்செய்தி யாகுதலாற் றான்விலக்க நூலுரைப்ப
தென்செய்வ தாக விசைந்து.      3.26

பேர் அறிவு மன்னியவன்

ஆத்மாவைப் பற்றிய சிறந்த அறிவு பொருந்தப்பெற்ற அறிவாளி

தன் இயல்வுக்கு ஈடாக

தன்னுடைய அநாதிவாஸனைக்குத் தக்கபடி

தான் இயலும்

(பிராகிருத விஷங்களிலேயே) தான் பழகுகிறான்

மற்றெவையும்

(சரீரத்தோடு கூடிய) மற்ற எல்லா ஜீவராசிகளும்

அந்நிலையே தன் செய்தி ஆகுதலால்

அவ்வண்ணமே தம் அநாதிவாஸனையையே பின் பற்றுவதால்

தான் விலக்க

அப்படிப்பட்ட இவர்களை அவ்வாஸனையிலிருந்து விலக்குவதற்கு

நூல் விசைந்து உரைப்பது

சாஸ்திரம் உறுதியுடன் நியமிப்பது

என்செய்வதாக

என்ன பயனின் பொருட்டு? (ஒன்றுமில்லையென்றபடி)

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top