Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஏவர் விருப்போ டிழவின்றி யென்மதத்தை
மேவி முயல்வார் விடப்படுவார் – பாவத்தா
லாங்கவர்க எல்லா ரறிவழிந்து மூடராய்த்
தீங்கமர்வ ரென்றே தெரி.        3.25

ஏவர் என் மதத்தை

எவர்கள் என் ஸித்தாந்தத்தை

விருப்போடு இழவின்றி மேவி முயல்வார்

பொருந்தி அனுஷ்டிக்கிறார்களோ

(அவர்) பாவத்தால் விடப்படுவார்

அவர்கள் அனைவரும் பாபங்களினின்றும் விடுபடுவர்

ஆங்கு அவர்கள் அல்லார்

இந்த ஸித்தாந்தத்தில் இப்படிப் பொறாமையின்மையோ சிரத்தையோ, அனுஷ்டானமோ இல்லாதவர்கள்

அறிவு அழிந்து

(நெஞ்சு படைத்த பயனான) எல்லா அறிவுகளும் அழியப்பெற்று

மூடராய்

விபரீதஜ்ஞானமுடையவராய்

தீங்கு அமர்வர்

(ஸத்தையை இழக்கையாகிற) பெருந் தீமையை அடைவர்

என்றே தெரி

என்றே நீ அறிந்து கொள்வாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top