Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நெஞ்சாற் புலனடக்கி நேர்கரும யோகத்தை
யெஞ்சா துழல்கரும விந்தியத்தாற் – றுஞ்சாது
தான்றொடங்கி நன்றியலுந் தன்மையுடன் றொத்தற்றான்
வான்றொடர்ந்த வண்புகழான மற்று.       3.5

மற்று

முற்கூறியவனிலும் வேறுபட்டவனாய்

நெஞ்சால்

மனத்தாலே

புலன்

இந்திரியங்களை

அடக்கி

(தனக்குப் பள்ளமடையான) சாஸ்த்ரீயகர்மங்களில் ஈடுபடுத்தி

எஞ்சாது உழல் கரும இந்தியத்தால்

இடைவிடாமல கர்மங்களில் ஈடுபடும் கர்மேந்திரியங்களால்

நேர் கருமயோகத்தை

(தனக்குப்) பொருந்திய கர்மயோகத்தை

துஞ்சாது

சோம்பலில்லாமல்

தான் தொடங்கி

தானே தொடங்கி

நன்று இயலும் தன்மையுடன்

நன்றான ஆத்மாவில் ஈடுபடும் தன்மையுடன்

தொத்தற்றான்

(மற்றவிஷயங்களில்) பற்றில்லாதவனாயிருப்பவன்

வான்தொடர்ந்த வண் புகழான்

ஆகாயமளாவிய பெரும் புகழாளனாவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top