Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

புலன்கண்மே லாமென்பர் போதஞ் செறுக்க
வலங்கொண் மனமதன்மேன் மன்னும் – புலங்கிளரும்
புந்தியதின் மேலாகும் புந்திதனிற் காமந்தான்
குந்திசிறு வாபரமாக் கொள்.      3.35

குந்தி சிறுவா

குந்தியின் பிள்ளையே!

போதம் செறுக்க

ஆத்ம ஞானத்தைத் தடை செய்வதில்

புலன்கள் மேலாம் என்பர்

இந்திரியங்கள் முக்கியமானவை என்று கூறுவர்

வலம் கொள் மனம்

வலிமை மிக்க மனம்

அதன் மேல் மன்னும் (என்பர்)

அவ்விந்திரியங்களைக்காட்டிலும் முக்கியமானவை எனக் கூறுவர்

புலம் கிளரும் புந்தி

விஷயங்களை அநுபவிக்க இழியும் உறுதியான அறிவு

அதின் மேலாகும்

அந்த மனத்தைக் காட்டிலும் முக்கியமாகும்

புந்தி தனில்

அந்த உறுதியான அறிவைக் காட்டிலும்

காமம் தான்

காமம் தன்னையே

பரமாக் கொள்

முக்கியமாக அறிவாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top